விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது இந்த நிலையில தன்னுடைய 60வது படத்தின் வேலைகளை தொடங்கிட்டார் விஜய். பரதன் இயக்கும் அந்த படத்துடைய சூட்டிங் கடந்த மாதம் 11ம் தேதி பூஜையோடு சென்னையில தொடங்கியது.
ஆனால் முதல்கட்ட படப்பிடிப்பு மூன்று நாட்கள் மட்டும்தான் நடந்தது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட சூட்டிங்கை இன்றைக்கு சென்னை பின்னி மில்ல தொடங்கியுள்ளது படக்குழு.
இதில் விஜய் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளார்கள் அதோடு அங்கேயே ஓபனிங் பாடலையும் சூட் பண்ண இயக்குனர் திட்டமிட்டுள்ளாராம்.
விஜய்யின் 60வது படத்தில அவருக்கு ஜோடியா கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அதேபோல் வில்லன் ரோலில் ஜெகபதி பாபு மிரட்டப்போகிறார். பக்கவான கமர்ஷியல் பார்முலாவில் உருவாகவிருக்கும் இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு கில்லியாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
விஜய் – பரதன் கூட்டணியில தயாராகும் புது படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண முடிவு செய்துள்ளார்கள்.