News Update :

அநுராதபுர கெபிதிகொல்லாவ அதிபர் N.P.அஜ்மல்கானுக்கு சேவை நலன் பாராட்டு விழா




அநுராதபுர மாவட்ட கெபிதிகொல்லாவ கல்வி வலயத்திற்குட்பட்ட உடும்புகல அல் ஹிக்மா முஸ்லிம் பாடசாலையில் முன்னைய அதிபர் N.P.அஜ்மல் கான் அவர்களுக்கு அவரது அதிபர் சேவையைப் பாராட்டி பாடசாலை சமூகம் விழாவொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தது.

இப்பாடசாலையில் சுமார் ஒரு தசாப்த காலமாக அதிபர் சேவையை செய்திருப்பதோடு மிகவும் பின்தங்கிய இப்பிரதேச பாடசாலைக்கு அயராது உழைத்து வளங்களை பெற்றுக் கொடுத்ததோடு இக்கிராம வளப்படுத்தலிற்கும் முன்னோடியாக திகழ்ந்த அதிபராகப் பார்க்கப்படுகின்றார்.

பாடசாலையின் புதிய அதிபர் S.H.A.றஷீட் மற்றும் ஆசிரியர் குழாம் ,பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்களால் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்வில் ஏற்புரை நிகழ்த்தும் வாய்ப்பும் முன்னைய அதிபருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அப்போது ஒரு சில கருத்துக்களையும் முன்வைத்தார்.ஒரு நிர்வாகியாக செயற்பட சந்தர்ப்பம் கிடைக்கும் போதுதான் நிறைய கசப்பான அநுபவங்கள் பெற முடிகிறது.அப்போது நாம் புரிந்துணர்வுடன் ஒரு சகோதரனாக செயற்பட வேண்டும்.பின்னர்தான் ஒரு அதிபராக செயற்பட வேண்டும். இல்லையெனில் பாடசாலைகளில் எதிர்பார்க்கப்படும் அடைவுகள் நோக்கி நகர முடியாது என்றார்.

மிகச் சிறப்பாக நடைபெற்ற இச்சேவை நலன் பாராட்டு விழாவிலே பாடசாலை சமூகம் சார்பாக நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டு முன்னைய அதிபர் கௌரவிக்கப்பட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

comments powered by Disqus