News Update :

திரு­ம­ணத்­துக்கு மறுத்த கள்­ளக்­கா­தலியை தீர்த்­துக்­கட்­டிய கள்­ளக்­கா­த­லன்



திரு­ம­ணத்­துக்கு மறுத்த கள்­ளக்­கா­த­லியை அவ­ரது கள்­ளக்­கா­தலன் கொடூ­ர­மாக கொலை செய்த சம்­ப­வ­மொன்று மும்­பை­யில் இடம்­பெற்­றுள்­ளது.

மும்பை கோவண்டி பைங்கன்வாடி, பாரத்நகர் குடிசைப்பகுதியை சேர்ந்தவர் சபிக் ஜாபர்சேக் (28). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர்.

இந்­நி­லையில் அதே பகுதியை சேர்ந்த நூர்பானு (28) என்ற பெண்ணுடன் இவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்­ளது.

நூர்பானுக்கும் திருமணமாகி கணவர், குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நூர்பானு தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சபிக் ஜாபர்சேக்கிடம் கூறியுள்­ளார்.

இதையடுத்து நூர்பானுவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள சபிக் ஜாபர்சேக் முடிவு செய்துள்­ளார். இந்­நி­லையில் அவ­ரது கண­வரை விவா­க­ரத்து செய்­யு­மாறு நூர்­பா­னுவிடம் சபிக் ஜாபர்சேக் தெரி­வித்­துள்ளார்.

ஆனால் நூர்பானு அவ­ர­து கணவரை விவாகரத்து செய்யாமல் மறுத்து வந்­துள்­ளார். இது சபிக்ஜாபர்சேக்குக்கு ஆத்திரத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இத­னை­ய­டுத்து நூர்­பா­னுவை சந்­திக்க வருமாறு சபிக் அழைத்­துள்ளார். இந்­நி­­லையில் கடந்த வாரம் இருவரும் அங்குள்ள மைதானத்தில் சந்தித்து பேசியுள்­ளனர்.

அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சபிக் ஜாபர்சேக் மீண்டும் தெரி­வித்­துள்­ளார். ஆனால் நூர்பானு இதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், தனது கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து வரமுடியாது என்றும் கூறியுள்­ளார்.

இதனால் கோபம் அடைந்த சபிக் ஜாபர்சேக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நூர்பானுவை சரமாரியாக குத்தி விட்டு ஓடிச் சென்­றுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் துடித்த நூர்பானுவை கோவண்டி பொலி­ஸார் மீட்டு சயான் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி நூர்­பானி உயிரிழந்துள்­ளார். சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சபிக் ஜாபர்சேக்கை கைது செய்துள்­ளனர். பின்னர் அவர் குர்லா நீதி­மன்­­றத்­தில் ஆஜர்படுத்தப்பட்டு நாளை வரை பொலிஸ் காவலில் வைக்­கப்­பட்­டுள்ளா

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

comments powered by Disqus