சவூதி நாட்டின் இளவரசர் வலீத் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் மீண்டும் இலங்கையில் பாரிய முதலீடு செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். இதன் நிமித்தமாக இம்மாதத்தில் இடம்பெறும் இளவரசர் அவர்களின் இலங்கை விஜயத்தை இலங்கைக்கான சவூதி தூதரகமும் ஊர்ஜிதம் செய்துள்ளதுடன், இளவரசரின் விஜயம் குறித்த ஏற்பாடுகளை இலங்கைக்கான சவூதி தூதுவர் அஸ்மி தாஸிம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், இளவரசர் வெகு விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, அரசின் முக்கியஸ்தர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் செயற்திறன் மிக்க ஆக்கபூர்வமான இரு தரப்புப் பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கையின் இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவர் அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா தெரிவித்துள்ளார்.
சுனாமி அனர்த்தத்தின் போது 17 மில்லியன் பெறுமதியான உதவிகளை இளவரசர் இலங்கைக்கு வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சர்வதேச ரீதியிலே பல்வேறுபட்ட அபிவிருத்திப்பணிகளில் ஈடுபாடு கொண்ட இளவரசர் இலங்கையிலும் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். இவ்விருப்பமானது இலங்கையினுடைய பொருளாதாரத்தில் பாரிய வளர்ச்சியை தோற்றுவிக்கும். இளவரசரின் பயணத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வரத்தக அமைச்சர் மலிக் விக்ரமசிங்க ஆகியோரை இளவரசர் சந்திக்கவுள்ளார். மேலும்,இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தன்னுடைய முழுப்பங்களிப்பைச் செய்வதாக உறுதியளித்தார்.
இலங்கையில் அந்நியச் செலவாணியில் சவூதியில் இருந்து 62 வீதத்திற்கும் அதிகமான வருமானம் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல் சவூதி அரசானது நன்கொடை எனும் அடிப்படையில் இலங்கையில் பல பாரிய அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளது. இவ்விடயங்களில் சவூதி அரச பரம்பரையும் இளவரசரும் கூடிய கரிசனை செலுத்தி வருவது வரவேற்கத் தக்கதாகும்.
தனியே முஸ்லிம்களுக்கு மாத்திரமல்லாமல், அனைத்து மதம் சார்ந்த மக்களுக்கும் சவூதி நாட்டின் உதவிகள் இன்றியமையாத ஒரு தேவையாக அமைந்திருப்பது நிதர்சனமாகும். இலங்கை மற்றும் சவூதிக்கான நட்புறவு இன்று நேற்றல்ல பல வருடங்களாக சுமூகமான முறையில் அமையப் பெற்றுள்ளமை எமது இலங்கை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.
மேலும் அண்மைக் காளங்களில் சவூதி இளவரசர் வலீத் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் இஸ்ரேலின் தூதுவராக செயற்படுகிறார் என ஊடகங்களில் பரவும் செய்தியானது உண்மைக்கு புறம்பானதாகும். இஸ்ரேலை பலமாக எதிர்க்கும் நாடுகளில் சவூதி முன்னிலை வகிப்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். இளவரசர் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வகையான அடிப்படையற்ற வதந்திகள் பரவுவதை முஸ்லிம்கள் நம்பக் கூடாது என்பதை இவ்விடத்தில் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மேலும், விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் இளவரசர் அவர்களின் வருகையை பயன்படுத்தி நாம் நாட்டிற்கு பாரிய அபிவிருத்தி மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அரசியல் பேதமின்றி இவ்வகையான இணக்கப்பாடுகள் தொடரும் போது நாடு இன்னுமின்னும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்பதை முன் மொழிய விரும்புகிறேன்.
ஊடகப் பிரிவு
அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
சமூக சிந்தனையாளர்,
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர்.
திருமணத்துக்கு மறுத்த கள்ளக்காதலியை அவரது கள்ளக்காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவமொன்று மும்பையில் இடம்பெற்றுள்ளது.
மும்பை கோவண்டி பைங்கன்வாடி, பாரத்நகர் குடிசைப்பகுதியை சேர்ந்தவர் சபிக் ஜாபர்சேக் (28). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த நூர்பானு (28) என்ற பெண்ணுடன் இவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
நூர்பானுக்கும் திருமணமாகி கணவர், குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நூர்பானு தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சபிக் ஜாபர்சேக்கிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து நூர்பானுவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள சபிக் ஜாபர்சேக் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் அவரது கணவரை விவாகரத்து செய்யுமாறு நூர்பானுவிடம் சபிக் ஜாபர்சேக் தெரிவித்துள்ளார்.
ஆனால் நூர்பானு அவரது கணவரை விவாகரத்து செய்யாமல் மறுத்து வந்துள்ளார். இது சபிக்ஜாபர்சேக்குக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து நூர்பானுவை சந்திக்க வருமாறு சபிக் அழைத்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் இருவரும் அங்குள்ள மைதானத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சபிக் ஜாபர்சேக் மீண்டும் தெரிவித்துள்ளார். ஆனால் நூர்பானு இதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், தனது கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து வரமுடியாது என்றும் கூறியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த சபிக் ஜாபர்சேக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நூர்பானுவை சரமாரியாக குத்தி விட்டு ஓடிச் சென்றுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் துடித்த நூர்பானுவை கோவண்டி பொலிஸார் மீட்டு சயான் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி நூர்பானி உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சபிக் ஜாபர்சேக்கை கைது செய்துள்ளனர். பின்னர் அவர் குர்லா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாளை வரை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளா
விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது இந்த நிலையில தன்னுடைய 60வது படத்தின் வேலைகளை தொடங்கிட்டார் விஜய். பரதன் இயக்கும் அந்த படத்துடைய சூட்டிங் கடந்த மாதம் 11ம் தேதி பூஜையோடு சென்னையில தொடங்கியது.
ஆனால் முதல்கட்ட படப்பிடிப்பு மூன்று நாட்கள் மட்டும்தான் நடந்தது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட சூட்டிங்கை இன்றைக்கு சென்னை பின்னி மில்ல தொடங்கியுள்ளது படக்குழு.
இதில் விஜய் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளார்கள் அதோடு அங்கேயே ஓபனிங் பாடலையும் சூட் பண்ண இயக்குனர் திட்டமிட்டுள்ளாராம்.
விஜய்யின் 60வது படத்தில அவருக்கு ஜோடியா கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அதேபோல் வில்லன் ரோலில் ஜெகபதி பாபு மிரட்டப்போகிறார். பக்கவான கமர்ஷியல் பார்முலாவில் உருவாகவிருக்கும் இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு கில்லியாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
விஜய் – பரதன் கூட்டணியில தயாராகும் புது படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண முடிவு செய்துள்ளார்கள்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட எம்.பி. பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் ஒரு வாரத்திற்கு பங்கேற்க முடியாது என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீடினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அவ்விசாரணை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாடு கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி அக்கட்சியின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் குருநாகலில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் கட்சிக்கு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. இதன்போது புதிய செயலாளராக சுபைதீன் ஹாஜியார் என்பவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த மாநாடு கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணாக கூட்டப்பட்டது எனவும் அதனால் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகம் செல்லுபடியற்றது எனவும் உத்தரவிடக்கோரி அதன் முன்னாள் செயலாளர் நாயகமான வை.எல்.எஸ்.ஹமீட் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு முதற் தடவடியாக கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இன்று மே 03ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி அதனை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக கட்சியின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தவிசாளரான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, புதிய செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார் , முன்னாள் தேசிய அமைப்பாளரான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முன்னாள் பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.சஹீத், முன்னாள் தேசிய கொள்கை பரப்பு செயலாலளர் முபாரக் அப்துல் மஜீத் மௌலவி உள்ளிட்ட 15 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

