News Update :

இன்றைய சந்தைகளில் விற்பனையாகுவது நைட்டிகளா அல்லது புர்காகளா ? சீரழிகின்றது ஆடைக் கலாசாரம்





நைட்டிகளாக மாறும் புர்காகள் அணிந்தும் அணியாத நிர்வாண நிலை …


விலை கொடுத்து வாங்கி மாற்றான் கண்களுக்கு பிறந்த மேனியாய் விருந்தாகும் அவலம் அரங்கேறும் நவீன உலகம் ..

சொந்த தாய் , மகள் , சகோதரி ,மனைவி நிர்வாணமாக சுற்றுவதை பார்த்தும் கண்டிக்காது உறுதுணையாக இருக்கும் அனைத்து தந்தை , கணவன் , மகன் , சகோதரன் போன்றோர் மறுமையில் தப்பவே முடியாது . வீட்டில் உள்ளவர்களைத் தடுக்காத இவர்கள் ஆண்கள் என்று வீராப்பு பேசுவதற்கு அருகதை உள்ளவர்களா ?

ஊரில் இவ்வாறான மெல்லிய , இருக்கமான நைட்டி போன்ற புர்காகளை விற்பனை செய்வோர் இஸ்லாமிய கண்ணோடத்தில் விபச்சாரர்கள் என்ற


குற்றத்திற்கு ஆளாகின்றனர் என்பதே உண்மை . விற்பனையாளர்களே நீங்கள் இவ்வாறான கேவலம் கெட்ட புர்காகளை உங்களது சொந்த குமரிகளுக்கு


அணிவித்து அழகு தான் பாருங்களேன் .


நீங்கள் உங்ளது பிள்ளைகளுக்கு விரும்பாததை ஏன் வியாபாரம் என்ற பெயரில் மற்றவர்களின் உடல் அங்கங்களை உலகிற்கு காட்சிப் படுத்துகிறீர்கள் . முடிவாக கேட்பது யாதெனில் , பெற்றோர்கள்


இது குறித்து கூடிய கவணம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.


மார்க்கம் உதறித்தள்ளப்பட்டு அந்நிய சக்திகள் ஊடுருவி எமது வாலிப சமுதாயத்தை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கின்றன .


நபியவர்கள் கூறியது போல் ” ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே அவர்களது பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவார்கள்.”

எனவே எல்லோரும் இவ்விசயத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து கேடுகெட்ட ஆடைப் பழக்கங்களிலிருந்து நம் இளம் பெண்களையும் ,


வாலிபர்களையும் பாதுகாப்போம் . 


இறைவன் பாதுகாப்பானாக… ஆமீன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

comments powered by Disqus