
துபாயை சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்று கடலுக்கு அடியில் சொகுசு வீடு ஒன்றை கட்டி வருகிறது. இந்த வீட்டின் மேல் பகுதி கடல் மட்டத்தில் இருந்து வெளியே இருக்கும்.
வீட்டின் உள்பகுதி கடலுக்கு அடியில் இருக்கும். இந்த வீட்டுக்குள் சென்றால் நீர்மூழ்கி கப்பலில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
மீன்கள் சுற்றி வலம் வரக்கூடிய சூழலில் கடலுக்கு அடியில் உள்ள வீட்டில் மக்கள் தங்கி மகிழலாம்.



